ஊர் எல்லாம் கூடி ஒழிக்க அழுதிட்டு... பேரை மாற்றி பிணம் என்று பெயரிட்டு... சூரியன் காட்டில் போய் சுற்றிவிட்டு... நீரில் மூழ்கி மறந்திடுவார்களே...! எனக்கும் இதுதான்... உனக்கும் இதுதான்... மறக்கக்கூடாது நம் சாவு மறக்கக்கூடாது... சாதிக்க தயங்கக்கூடாது...!
எல்லோரும் நல்லவர்களை பார்க்கணும்னு தான் ஆசை படுகிறார்கள் - ஆனால் நல்லவர்களாக இருக்க நினைப்பதில்லை...! நீ நல்லதே நினை... நல்லதே செய்... - உன்னை சுற்றி என்றும் நல்லதே நடக்கும்... அப்போதே நல்லவன் தெரிவான்... உன் வீட்டு கண்ணாடியில்....!
என் வேதனைபலரை சிரிக்கவைத்துள்ளது... - ஆனால் என் சிரிப்புஒருவரைக்கூட ஒருநாளும்வேதனை படுத்தியதுஇல்லை..! என் நெஞ்சில்சோகங்கள்இருந்தாலும்... கண்ணில்கனவுகள்இருந்தாலும்... வாழ்வில்வருத்தங்கள்இருந்தாலும்... என் நம்பிக்கையில்என்றும் என் நண்பன் (பகவான்) இருப்பான்...! வாழ்கையில்வெற்றிப்பெற்றேன் - என்று சொல்வதைவிட... யாரையும் வேதனைபடுத்தவில்லை... - என்று சொல்லவேவிரும்புகிறவன்..! கவிதைகள்... நசுங்கியஎன் நம்பிக்கைகளுக்குஎன் பேனாவிலிருந்துஒரு இரத்ததானம்...! நானும் வரையநினைத்து சித்திரம்தான் - ஆனால் வந்ததோகோடுகளே... என்னுடையஇந்த பசிபருவத்தில் - என் திறமைக்கும்.. கலைஆர்வத்துக்கும்.. எழுத்துக்கும்... அதன்கருத்துக்கும்... - என் கனவுக்கும்துடிப்புக்கும் பந்திபோடயாரும்இல்லை...! நிச்சயம் ஒருநாள் - இந்த நாட்டுக்கேநான்பந்திபோட்டு விருந்துவைப்பேன்...! - என் கவிதைகளைநண்பர்களுக்கு பந்திவைத்தேன்... என்னைலேசாககாயபடுதிவிட்டு - பின் மருந்தும்தடவினார்கள்...! அதோடுவிடாமல் "தொடர்ந்துஎழுதினால் கவிதைவந்துவிடும்போல் இருக்கிறது " - என்று ஜோசியம்சொன்னார்கள்...! அவர்களுக்குபுரியவைக்க - என் நிகழ்காலத்தின்வறுமை... என்தகுதிக்குதகாததுஎன்று கருதினேன்...! - அப்போது எனக்கானசிம்மாசனம்செய்யப்பட்டு வழியில்வந்து கொண்டிருக்கிறதுஎன்றும்... அதுவரைக்கும் - நான் அனுபவிக்கும் சோதனைகளும்... வேதனைகளும்... கொண்டிருக்கும்வாழ்க்கை... - என் தற்காலிகசாபம்என்றும் நினைத்துகொண்டேன்....! ஒருநாள் திருச்சிநிலையத்தில்இருந்து இரயிலில்சென்னைபுறப்பட்டேன்... - என் கண்களுக்கு "தூங்காதே"என்று கட்டளைபோட்டேன்...! ரயில்இட்டதாளத்தை ரசித்துகொண்டேவந்தேன்... நாடுஇரவில் - என் கண்கள்கட்டளையை மீறிவிட்டன...! எழும்பூரில்இறங்கினேன்... எனக்குஎல்லாம் புதியதாய்இருந்தது..! சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும்வித்தியாசம் தெரியாமல் - அந்தஊர் அவசரம்பிடித்து சிரிப்பைதொலைத்துவிட்டு ... எதையோ தேடிக்கொண்டிருக்கும் - அந்தஊர் மனிதர்கள் புதியதாய்இருந்தது...! பல கல்லூரிகள்பார்த்தேன்.. பரவாயில்லைஎன்றேன்... கடற்கரைசாலையில் கடல்பார்த்தேன் - அதன் கம்பீரம்பார்த்தேன்..! அலைகாற்றிடம்படுக்க மடிகேட்டேன்.. - உங்கள் உறவுஇருந்தால்போதும் .. நான் லட்சம்கவிதைகள் எழுதுவேன் - என்று காற்றோடுஉறவாடினேன்...! சென்னையும் அதன்வாழ்கையும் அநியாயமாய்இருந்தபோதும் எனக்குபிடித்தது..! இங்கேயேஇருந்தால் - என் கலைக்கும்... எழுத்துக்கும்... நல்லவாய்ப்புகிடைக்கும் என்று நம்பினேன்..! நல்லஅறிவினால்.. உள்ளதெளிவினால்.. வந்தகருத்தினால்.. இந்தஎழுத்தினால்.. தாள்களைநிரப்பினான்... ஒருகவிஞன்...! - என்று எழுதிகொண்டே.. போவேன்அன்றுபோல... சிலவருடங்கள் கழித்து தொடரும் - இந்த பயணங்கள்... இது ஒரு சிறியஇடைவேல்லை...! இதுவரை நடந்துபோன பயணங்களும் .. பாதைகளும்.. பற்றிகூறிவிட்டேன்...! இனிவருவது வந்தபிறகே...! - அதுவரை இந்த பேனாவும்... தாள்களும்... சற்றுஓய்வு எடுக்கட்டும்...!