Sunday, July 12, 2009

வாழ்க்கை...!

ஊர்
எல்லாம் கூடி
ஒழிக்க அழுதிட்டு...
பேரை
மாற்றி பிணம்
என்று பெயரிட்டு...
சூரியன் காட்டில்
போய் சுற்றிவிட்டு...
நீரில் மூழ்கி
மறந்திடுவார்களே...!
எனக்கும் இதுதான்...
உனக்கும் இதுதான்...
மறக்கக்கூடாது
நம் சாவு
மறக்கக்கூடாது...
சாதிக்க
தயங்கக்கூடாது...!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!

நல்லதே நடக்கும்..!

எல்லோரும் நல்லவர்களை
பார்க்கணும்னு தான்
ஆசை படுகிறார்கள் - ஆனால்
நல்லவர்களாக
இருக்க
நினைப்பதில்லை...!
நீ
நல்லதே நினை...
நல்லதே செய்... - உன்னை
சுற்றி
என்றும் நல்லதே நடக்கும்...
அப்போதே
நல்லவன் தெரிவான்...
உன் வீட்டு
கண்ணாடியில்....!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!

நானும் என் பயணங்களும்...!

என்
வேதனை பலரை
சிரிக்க வைத்துள்ளது... - ஆனால்
என்
சிரிப்பு ஒருவரைக்கூட
ஒருநாளும் வேதனை
படுத்தியது இல்லை..!
என்
நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்...
கண்ணில் கனவுகள் இருந்தாலும்...
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்...
என்
நம்பிக்கையில் என்றும்
என்
நண்பன் (பகவான்)
இருப்பான்...!
வாழ்கையில் வெற்றிப்பெற்றேன் - என்று
சொல்வதை விட...
யாரையும்
வேதனை படுத்தவில்லை... - என்று
சொல்லவே விரும்புகிறவன்..!
கவிதைகள்...
நசுங்கிய என்
நம்பிக்கைகளுக்கு என்
பேனாவிலிருந்து ஒரு
இரத்ததானம்...!
நானும்
வரைய நினைத்து
சித்திரம் தான் - ஆனால்
வந்ததோ கோடுகளே...
என்னுடைய இந்த
பசி பருவத்தில் - என்
திறமைக்கும்..
கலை ஆர்வத்துக்கும்..
எழுத்துக்கும்...
அதன் கருத்துக்கும்... - என்
கனவுக்கும் துடிப்புக்கும்
பந்தி போட யாரும் இல்லை...!
நிச்சயம்
ஒரு நாள் - இந்த
நாட்டுக்கே நான் பந்திபோட்டு
விருந்து வைப்பேன்...! - என்
கவிதைகளை நண்பர்களுக்கு
பந்தி வைத்தேன்...
என்னை லேசாக காயபடுதிவிட்டு - பின்
மருந்தும் தடவினார்கள்...!
அதோடு விடாமல்
"தொடர்ந்து எழுதினால்
கவிதை வந்துவிடும்போல்
இருக்கிறது " - என்று
ஜோசியம் சொன்னார்கள்...!
அவர்களுக்கு புரியவைக்க - என்
நிகழ்காலத்தின் வறுமை...
என் தகுதிக்கு தகாதது என்று
கருதினேன்...! - அப்போது
எனக்கான சிம்மாசனம் செய்யப்பட்டு
வழியில் வந்து
கொண்டிருக்கிறது என்றும்...
அதுவரைக்கும் - நான்
அனுபவிக்கும்
சோதனைகளும்...
வேதனைகளும்...
கொண்டிருக்கும் வாழ்க்கை... - என்
தற்காலிக சாபம் என்றும்
நினைத்து கொண்டேன்....!
ஒரு நாள்
திருச்சி நிலையத்தில் இருந்து
இரயிலில் சென்னை புறப்பட்டேன்... - என்
கண்களுக்கு
"தூங்காதே" என்று
கட்டளை போட்டேன்...!
ரயில் இட்ட தாளத்தை
ரசித்து கொண்டே வந்தேன்...
நாடு இரவில் - என்
கண்கள் கட்டளையை
மீறிவிட்டன...!
எழும்பூரில் இறங்கினேன்...
எனக்கு எல்லாம்
புதியதாய் இருந்தது..!
சுறுசுறுப்புக்கும்
பரபரப்புக்கும் வித்தியாசம்
தெரியாமல் - அந்த ஊர்
அவசரம் பிடித்து
சிரிப்பை தொலைத்துவிட்டு ...
எதையோ
தேடிக்கொண்டிருக்கும் - அந்த ஊர்
மனிதர்கள்
புதியதாய் இருந்தது...!
பல
கல்லூரிகள் பார்த்தேன்..
பரவாயில்லை என்றேன்...
கடற்கரை சாலையில்
கடல் பார்த்தேன் - அதன்
கம்பீரம் பார்த்தேன்..!
அலை காற்றிடம் படுக்க
மடி கேட்டேன்.. - உங்கள்
உறவு இருந்தால் போதும் ..
நான்
லட்சம் கவிதைகள்
எழுதுவேன் - என்று
காற்றோடு உறவாடினேன்...!
சென்னையும்
அதன் வாழ்கையும்
அநியாயமாய் இருந்த போதும்
எனக்கு பிடித்தது..!
இங்கேயே இருந்தால் - என்
கலைக்கும்...
எழுத்துக்கும்...
நல்ல வாய்ப்பு கிடைக்கும்
என்று
நம்பினேன்..!
நல்ல அறிவினால்..
உள்ள தெளிவினால்..
வந்த கருத்தினால்..
இந்த எழுத்தினால்..
தாள்களை நிரப்பினான்...
ஒரு கவிஞன்...! - என்று
எழுதிகொண்டே..
போவேன் அன்று போல...
சில வருடங்கள்
கழித்து தொடரும் - இந்த
பயணங்கள்...
இது
ஒரு
சிறிய இடைவேல்லை...!
இதுவரை
நடந்துபோன
பயணங்களும் ..
பாதைகளும்..
பற்றி கூறிவிட்டேன்...!
இனி வருவது
வந்த பிறகே...! - அதுவரை
இந்த
பேனாவும்...
தாள்களும்...
சற்று ஓய்வு
எடுக்கட்டும்...!

இப்படிக்கு
வரபோகின்ற நடிகன்...!